Sunday 14 August 2016

அடிசில் 104

குலோப் ஜாமுன்
- நீரா -
  

தேவையான பொருட்கள்: 
பால் மா  -  1  கப்
பால்  -  1 மே.கரண்டி
பட்டர்  -  1 தே.கரண்டி
கோதுமை மா  -  1 தே.கரண்டி
ரவை  -  1  தே. கரண்டி
பேக்கிங் பவுடர்  -  1 சிட்டிகை
சீனி  -  1 கப்
தண்ணீர்  -  1 கப்
எலுமிச்சம் பழச்சாறு  -  ¼ தே.கரண்டி
ஏலக்காய்ப் பொடி  -  ½ தே.கரண்டி

செய்முறை:
1. ஒரு சிறு கிண்ணத்தில் ரவையை இட்டு ரவைக்கு மேலே தண்ணீர் நிற்கக்கூடியதாகத் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் பால் மாவை இட்டு பட்டர் சேர்த்துப் நன்கு பிசிறி, பின்னர் கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்க.
3. ஊறவைத்த ரவையை தண்ணீர் இன்றி வடித்து மாக்கலவையுடன் சேர்த்து கட்டிகள் இன்றி மென்மையாகக் கலந்து கொள்க.
4. இந்தக் கலவையுள் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து கையில் மா ஒட்டாது மென்மையாகப் பிசையத் திரண்ட பால் போல ஒன்றாய் திரண்டு வரும். ரொட்டிக்கு மா குழைப்பது போலக் குழைக்க வேண்டாம்.
5. பிசைந்த மாவை ஈரமான துணியால் மூடி வைக்கவும்.
6. வேறு ஒரு பாத்திரத்தில் சீனியை இட்டு தண்ணீர் விட்டு மெல்லிய நெருப்பில் சூடாக்கவும்.
7. அதற்குள் எலுமிச்சம் சாறு விட்டுக் கலந்து, ஏலப்பொடியும் சேர்த்துக்கொள்க.
8. சீனிக் கரைசல் கையில் ஒட்டும் பருவத்தில் இறக்கவும்.
9. மூடி வைத்துள்ள மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்க.
10. உருண்டைகள் அமிழ்ந்து பொரியக்கூடிய அளவிற்கு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிதமான நெருப்பில் சூடாக்கி [கொதிக்கக் கூடாது] உருண்டைகளை இட்டு பொரிக்கவும். கரண்டி உருண்டைகளில்  படாதபடி எண்ணெய்யை மெதுவாக்கச் சுழற்ற உருண்டைகள் எண்ணெய்க்குள் உருண்டு பொரியும்.
11. மிதமான நெருப்பில் பொரித்து [8 - 9 நிமிடம்], பொன்னிறமாகப் பொரிந்ததும் எடுக்கவும்.
12.காச்சிய சீனிப்பாகினை மீண்டும் அடுப்பில் வைத்து பொரித்தெடுத்த குலோப் ஜாமுனைப் போட்டு மிதனான நெருப்பில் 2 - 3 நிமிடம் சூடாக்கி இறக்கி, 3 மணி நேரம் ஊறியபின் உண்ணலாம்.

No comments:

Post a Comment